காட்டு யானை பாதுகாப்பு வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி ஆரம்ப திட்டத்தை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய காட்டு யானை- மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் அமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2021 ஆண்டில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டமாக 1,500 கிலோ மீற்றர் மின்சார வேலி அமைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



