தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

0

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தனது அக்காவை விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய நாவலப்பிட்டி வெவேகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய தரிந்து வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அந்த இளைஞனின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply