நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்.

0

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாணசபைகள் இயங்காத நிலையிலும் அவற்றின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடு பொருளாதார ரீதியாக பாதிப்பு எதிர் நோக்கிய நிலையில் பிரதான வருமான வழிமுறையாக உள்ள சுங்கம், மதுவரி திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் தற்போது குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நிலைக்கு கொரோனா பரவல் பிரதான காரணமாக உள்ளதாகவும் அதற்கு முகம்கொடுப்பதற்காக அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply