தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குப்பவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையான ரசிகர் வட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன்
மேலும் மலையாளத்தில் நிழல் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிபில் காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
அத்துடன் நயன்தாரா அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் நடிகை நயன்தாரா அடுத்த 2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கவுள்ளார்.
இவற்றில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்கவுள்ளார்.
இவ்வாறு மற்றும் ஒரு படத்தை இயக்க போவது யார்? அதில் நயன்தாராவுடன் நடிக்கப்போகும் நடிகர் யார்? என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



