தமிழகத்தில் இன்று முதல் இரவு 9 மணி வரையில் கடைகள் திறக்கப்படும்.

0

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுடன் கூடிய ஊரடங்கு 6 மணியுடன் தளர்தப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் கொவிட் நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு 19.07.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்குபற்றி கொள்ள முடியும்.
அவ்வாறு இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மாத்திரமே அனுமதி.

கொவிட் 19 கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்ந்தும் அனுமதிக்கப் படும்.

மேலும் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலான செயற்பாடுகளுக்கும் அனுமதிக்கப்படுகின்றன.
அதாவது புதுச்சேரி காண பஸ் சேவை தொடங்கியது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள்.டீக்கடைகள்.அடுமனனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, கார வகை, பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன்டன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நோய்த்தொற்று மேலாண்மை விதிமுறைகளை கடைபிடிக்கபடுவது கண்காணிக்கப்பட்டு, விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply