இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து இன்று முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்,
இதற்கமைய தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மெட்ரிக் அதிபர் செய்தியாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்த இணையவழி ஊடான கற்பித்தல் புறக்கணிப்புக்கு அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் மூலம் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



