பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியர் கைது!

0

ராகமை தேசிய வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்திய சாலையின் மருத்துவர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய ராகமை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய ராகமை வைத்தியர் விடுதியின் பெண் வைத்தியர் ஒருவரின் அறைக்குள் புகுந்து ஆடை மாற்றும் போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கடந்த 10 ஆம் திகதி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் இந்த வைத்தியர் மீது இதுபோன்ற இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply