பெட்ரோல் விலை அதிகரிப்பால் பொது மக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்!

0

கர்நாடக மாநில தாவணகெர தொகுதி பா. ஜனதா எம்.பி யாக இருக்கின்ற சித்தேஷ்வர் நேற்றைய தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி நிருபர்களினால் சித்தேஷ்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த அவர்,
பெட்ரோல், டீசல்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இதனால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இந்த சைக்கிளை பயன்படுத்துவதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.

அத்துடன் சிக்கனமானது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன் எந்த நோயும் நம்மை அணுகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை யின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல் டீசல்களின் விலை குறையும்.

மேலும் இந்த பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply