நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் தனிமைப்படுத்தல் விதியின் கீழ் கைது செய்வதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரினால் உயர்நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மனுவினை தாக்கல் செய்யபட்டுள்ளது.
இதற்கமைய இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகந்திர அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க மற்றும் கர்ஸன ராஜகருணா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



