இரு நபர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்து அதிரடிக் கைது!

0

திட்டமிட்ட குற்ற செயல்கள் புரியும் இரண்டு குழுக்களின் இரண்டு நபரை கட்டுநாயக்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த இரண்டு பேரும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மினுவாங்கொடை- ஹீனெடியகல நீல் என்பவருடைய சகோதரன் ஜாய் எனப்படும் ருக்மல வசந்த என காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களிடமிருந்து வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply