களுவாஞ்சிக்குடி விபத்தில் மூவர் படுகாயம்.

0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் களுதாவளைலயிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும் கல்லாறு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply