இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

0

நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி போஹகொட்டுவ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட அகலவத்தை கிராமமும் அரஸ்கம கிராமமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த7 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply