கடலோடிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்!

0

நாட்டின் பல்வேறு பகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிப்பாக தென் மேற்குப் பகுதிகளான மேல், சப்பிரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு அதிகளவான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும்.

சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஊவா மற்றும் தென் கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

அத்துடன் மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புக்களும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

அவ்வாறு நாடடைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களும் கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும் கடலோடிகள் மற்றும் மீனவ சமூகம் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply