யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

0

யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த மோதல் சம்பவமானது காசு கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

28 வயதான நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply