இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையை முடக்க அதிரடித் தீர்மானம்.

0

இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சியின் அலைவரிசையை இடை நிறுத்துவதற்கு தற்போது அரசாங்கம் முயற்சி செய்வதாக குறிப்பிட்டு இன்று நாடாளுமன்றில் பாரியளவிலான சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு சிரச, தொலைக்காட்சி வலையமைப்பு மீது அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ள தடையுத்தரவு தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம் அரச தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனால் நாடாளுமன்றில் கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply