முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதற்கமைய இன்று காலை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் பசிலின் பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



