துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு.

0

கதிர்காமம் – நாகவீதி- சமுர்த்தி வீதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தனிப்பட்ட வாக்கு வாதத்தினால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் கதிர்காமம் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply