சுகாதார பணியாளர்களினால் முன்னெடுக்கப்படு வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் முதல் சுகாதாரத் துறை சார்ந்த சில பணியாளர்கள் மாத்திரம் விசேடமாக கவனிக்க படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இவர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இன்று வரை தொடர்ந்தது.
மேலும் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்று தருவதாக இன்று வழங்கியிருந்த எழுத்துமூல உறுதியையடுத்து இந்த பணி பகிஸ்கரிப்பு கைவிடும் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



