இரசாயன உரத் தட்டுப்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

0

நுவரெலியா விவசாயிகள் இன்று காலை இரசாயன உரத் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள திடலின் முன்பாகக் கூடி நின்று குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகர வர்த்தகர்களும் தங்களுடைய வியாபார நிலையங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு கூடி தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் தட்டுப்பாடு இல்லாமல் இரசாயன உரத்தை பெற்று கொடுக்குமாறு பாதைகளை இந்திய வண்ணம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் குறித்த விடயத்தை வலியுறுத்தி இன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டங்கள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply