தற்போது பெரும் ஆபத்தாக மாறிவரும் கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கும் மேற்ப்பட்டோர் பார்வை இழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல் ஒன்றை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட அரசு மருத்துவமனை மேலாளர் நிர்மலா தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 30 பேருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, மிக தாமதமாக வந்ததால் இந்த பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்த உடனே அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தால் கண் பார்வை இழப்பை தவிர்த்திருக்கலாம். கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் வைத்தியர் நிர்மலா மேலும் தெரிவித்துள்ளார்.



