15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது.

0

15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் 28பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்டஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து சிறுமியை விற்பனை செய்வதற்கு மேலும் நான்கு இணைய தளங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை இணையதளம் மூலம் பெற்றுக்கொண்ட மாலைதீவு பிரஜை ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு அறிக்கையொன்றை வழங்கிய விருந்தகம் ஒன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply