வாகன சாரதியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி – சென்னையில் நூறு ரூபாவை தாண்டியது பெட்ரோலின் விலை.

0

சர்வதேச ரீதியில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் , பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதற்கமைய நாடு முழுவதும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மே வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத் துறை எண்ணை நிறுவனங்கள் திடீரெனஅவற்றின் விலையை உயர்த்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பெட்ரோல் ஒரு லீட்டர் நூறு ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply