உடல் சூட்டைத் தணிக்கும் அற்புத சித்த மருத்துவக் குறிப்புகள்

0


Siddha medicine tips to cure body heat
கோடை வெப்பத்தாலும், நீர்ச்சத்து குறைவு போன்ற காரணங்களாலும் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க அற்புதமான சித்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.


மஞ்சள் கிழங்கை நன்றாக அரைத்து சுத்தமான குடிநீரில் கரைத்து அரை மணிநேரம் கழித்து தெளிந்த நீரைக் குடித்தால் உடல் சூடு தணியும்.
உணவில் அடிக்கடி முளைக் கீரைத் தண்டைச் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு நீங்கும்.


உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் முள்ளங்கியை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். மழைக்காலத்தில் முள்ளங்கியைச் சாப்பிட்டக் கூடாது. ஜலதோசம் பிடிக்கும்.


சிலருக்கு உடல் சூடு காரணமாக கண்களில் எரிச்சல் உண்டாகும். வயிற்றுவலியும் ஏற்படும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் அரைக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு அடங்கும்.


அடிக்கடி இளநீர் அருந்தினால் உடல் சூடு தணிவதுடன் வயிற்றில் உள்ள புண்களும் ஆறும்.


சாம்பல் கத்திரியை விதை நீக்கி, குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.


நார்த்தம் பழத்தைப் பிழிந்து வாரத்துக்கு இரண்டு முறை சர்பத் செய்து குடித்தால் உடல் சூடு கணிசமாகக் குறையும்.


வெந்தயத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் இரண்டு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.


அஸ்வகந்தா இலையைப் பச்சடியாகவோ துவையல் செய்தோ சாப்பிட்டால் உடல் வெப்பம் குறையும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply