இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் காணி தொகுதி பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமையக பாடசாலைக்கான அபிவிருத்தி பணிகளுக்காகவே குறித்த5 ஏக்கர் காணியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த கோரிக்கையானது பிரதமரின் பெருந்தோட்டத் துறை கண்காணிப்பாளர் செந்தில் தொண்டமானின் பெருந்தோட்ட நிறுவனத்திடம் வைக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் காணி தொகுதியை பாடசாலைக்கு வழங்குவதற்கான ஆவணத்தினை பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திமுது வெருனுகொடவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



