வவுனியா மாவட்டத்தில் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை.

0

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது.

இதற்கமைய குறித்த நடவடிக்கையானது பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இன்று காலை வவுனியா நகர வீதி, சந்தை உள்வட்ட வீதி போன்ற மேலும் சில பகுதிகளில் குறித்த பி. சி. ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர் பல்வேறு தேவைகளுக்காக நகருக்குள் பிரவேசித்தோர் வாகன சாரதிகள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு குறித்த பி. சீ. ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply