கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்.

0

புத்தளம் – உடப்பு பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கமைய குறித்த பெண்ணின் சடலமானது இன்றைய தினம் காலை கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுவரையில் உயிரிழந்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply