பயணக் கட்டுப்பாட்டினை மீறி பயணித்த தனியார் பேருந்து.

0

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தற்போது அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பேருந்தின் சாரதி உட்பட அதில் பயணித்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இன்று காலை கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பேருந்தை காவல்துறையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் இந்த பேருந்தில் கொண்டுவரப்பட்ட 2 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது..

Leave a Reply