மெரினா கடற்கரைக்கு செல்பவர்களை அவதானிப்பதற்கு ட்ரோன் கேமரா.

0

சென்னையில் கொவிட் தொற்று பரவல் காரணத்தினால் மெரினா கடற்கரைக்கு செல்லவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது கடந்த 50 நாட்கள் அமுலில் இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை அறிவிக்கப்படு நடைப் பயிற்சிக்கு மாத்திரம் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

காலை 6 மணி முதல் 9 மணி வரையில் 3 மணி நேரம் மாத்திரமே இந்த நடைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் பிறகும் நடைப்பயிற்சிக்காக மக்கள் ஒன்று கூடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரம் பேர் வரையில் குறித்த நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் கொவிட் தொற்றுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயற்படுகின்றனர்

இவ்வாறு விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் தடையை மீறி மணல் பகுதிகளுக்கு சென்று விடுகின்றார்கள்.

இவ்வாறான நபர்களையும் காவல்துறையினர் கடற்கரையில் இருந்து வெளியேற்றி வருகின்றார்கள்.

மேலும் இப்படி கடற்கரை பகுதியில் யாராவது நடமாடுகிறார்களா என்பதை அவதானிப்பதற்கு காவல்துறையினர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply