தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்குமா – நாளை முதலமைச்சரினால் எடுக்கப்படவுள்ள முடிவு.

0

தற்போது கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதை பொறுத்தே அவ்வப்போது ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டு வருகின்றது.

அத்துடன் கடந்த மாதம் 28ஆம் திகதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி நோய்த் தொற்று சதவீதத்தின் அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

அவ்வாறு இரண்டாவது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உட்பட 23 மாவட்டங்கள் இவற்றுள் அடங்குகின்றன.

அத்துடன் மூன்றாவது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளடக்கப் படுகின்றன.

இவற்றுள் மூன்றாவது வகையில் இடம்பெற்றுள்ள நான்கு மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய இரண்டு வகை மாவட்டங்களுக்கும் தரவுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளன.

குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 5 ஆம் திகதி முடிவடைகின்றது.

மேலும் ஊரடங்கு தளர்வு குறித்து நாளை காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதன் பின்னரே ஊரடங்கு நீடிப்பது மற்றும் தளர்வுகளை அறிவிப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply