அரச வைத்தியர்களின் ஓய்வு நிலை வயதில் ஏற்பட்ட மாற்றம்.

0

அரச வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பில் இலங்கையின் அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகதினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

ஆரம்பத்தில், அரச சேவையில் அனைத்து தரங்களின் வைத்திய அதிகாரிகளுக்குமான கட்டாய ஓய்வு வயது 60 ஆக காணப்பட்ட நிலையில் இது கடந்த ஆண்டு 61 ஆக நீடிக்கபப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply