இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொவிட் தொற்று தெடர்பான விபரம்.

0

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 1,786 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர் என்பதுடன் ஏனைய 78 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாட்டில் கொவிட் தொற்று உறுத்தியானவர்களின் மொத்த எண்ணிக்கை 259,089 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 30,107 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குறித்த தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 225,952 ஆக உயர் வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3077 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply