திருமணம் முடிந்த ஆண்களோ அல்லது பெண்களோ மறந்தும்கூட இந்த காரியங்களை செய்துவிடாதீர்கள்!

0

திருமணம் முடிந்த ஆணோ, பெண்ணோ ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது என்கிறது சாஸ்த்திரம். அது என்னென்ன விஷயங்கள் என்று பார்க்கலாம் வாங்க.

தாய், தந்தை இருவரும் உயிருடன் இருக்கும்போது திருமணம் முடிந்த நபர் வெள்ளிக்கிழமைகளில் முக சவரம் (ஷேவிங்) செய்ய கூடாது. ஆணோ அல்லது பெண்ணோ இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ, நிற்கவோ கூடாது.

துவைக்காத உடைகளை வீட்டின் கதவில் போடக்கூடாது, நகத்தை கடித்து துப்புவதோ அல்லது வெட்டிய நகத்தை வீட்டில் வைப்பதோ கூடாது. சுப நிகழ்வுகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய உடனே குளிக்க கூடாது.

சாப்பிடும் உணவு உருண்டைபோல் உருட்டியோ அல்லது உள்ளங்கையில் படும்படியோ சாப்பிடக்கூடாது. ஈரமான துணிகளை உடுத்த கூடாது. கோவில்களில் தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.

பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்.- Source: tamspark


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply