
முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது “வேலுமயிலும்’. இதனை “மகா மந்திரம்’ என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பார்கள். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் “வேலு மயிலும்’ மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார்.
“துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில்’ என்றும் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். இந்தமந்திரத்தை “வேலும் மயிலும்’ என்று ஜெபிக்காமல் ஆறெழுத்தாக “வேலுமயிலும்’ என்றே ஜெபிக்க வேண்டும். முருகனின் வேலையும், மயிலையும் முன்னிறுத்தி “வேலும் மயிலும் துணை’ என்று சொல்வோருக்கு மரண பயம் இருக்காது என்பது ஆன்றோர் வாக்கு. குறிப்பாக, ஒரே சமயத்தில் பல விஷயத்தில் கவனம் வைக்கும் அஷ்டாவதானிகள், தசாவதானிகள் போன்றோர், தங்கள் அறிவு தடைபடாமல் இருக்க இந்த மந்திரத்தை ஜெபிப்பர் என்று வாரியார் கூறுகிறார். இதனையே ஆறெழுத்தாக “வேலுமயிலும்’ என்றும் ஜெபிப்பதுண்டு.. முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.ஓம்’ என்னும் பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்வது மயில். இதன் பார்வை பட்ட இடத்தில் நன்மை உண்டாகும்.

அதனால், நீங்கள் எந்த பெரிய மந்திரத்தை நினைவில் வைத்திருக்கா விட்டாலும், ‘வேலுமயிலும்’ மந்திரத்தை மட்டுமாவது தினந்தோறும் ஜபித்து வந்தால், முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையின் தரம் உயரும். வீட்டில் நிம்மதி பெருக்கெடுக்கும்.- Source: toptamil
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
