ஆடி மாதத்தில் தவறவிடக் கூடாத சில முக்கியமான நாட்களையும், முக்கிய வழிபாடுகளையும் பார்ப்போம்!

0

? ஆடி வெள்ளி: ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விரதமிருந்து கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வேண்டினால் பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.

? ஆடிக் கிருத்திகை: ஆடி மாதத்தில் கிருத்திகை தான் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முருகப் பெருமானை வேண்டி வந்தால் நினைத்தது நடக்கும்.

? ஆடி அம்மாவாசை: இறந்த முன்னோர்களுக்கு உகந்த நாள். முன்னோர்களை அமாவாசை நாளில் வழிபடுவதன் மூலம் அவர்கள் மோட்சம் அடைவர். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதங்களை பிள்ளைகளால் பெற முடியும்.

? ஆடிப்பூரம்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் உகந்த நாள். இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பல பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில் நல்ல வரன் கைகூடும்.

? ஆடிப் பெருக்கு: ஆடி மாதம் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் நுரை பொங்க ஓடும் நாள். இந்நாளில் நீர்நிலைகளில் விளக்கேற்றி மக்கள் வழிபடுவதன் மூலம் வீட்டில் இன்பமும் செல்வமும் ஆண்டுதோறும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

? ஸ்ரீ வரலட்சுமி விரதம்: பிரம்மரின் தாயுமான அஷ்டலட்சுமிகளின் மூலமுமான மகாலட்சுமிக்கு இந்த நாளில் விரதமிருந்து மகாலட்சுமியை சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.- Source: kalakkal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply