புத்திர பாக்கியத்தை அருளும் சந்தான கோபாலர் தெரிந்து கொள்ளலாமா?

0

?️புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் சந்தான கோபால ஹோமத்தை வீட்டில் செய்து வழிபட விரைவில் பலன் பெறலாம். ஆனால் அதிகமாக செலவாகும் ஹோமங்களில் இதுவும் ஒன்று.

?️ என்ன செய்யலாம்:

ஒரு வேளை கோவிலுக்கு செல்ல நேரம் இல்லை, வீட்டில் ஹோமம் செய்யவும் முடியவில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் சந்தான கோபால கிருஷ்ணன் மூல மந்திரத்தை மட்டுமே ஜபித்தாலும் பலன் பெறலாம். அத்தகைய மூல மந்திரம் பின் வருமாறு,

?️ ஓம் -ஸ்ரீம் -ஹ்ரீம் -க்லெளம் -தேவகீ சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத: தேவ தேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ

?️ குழுவாக வழிபடலாம்:

சுயம்வர பார்வதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், சந்தான கோபால ஹோமம் ஆகியவை அதிக செலவை ஏற்படுத்தும்.
அதனால் இந்த ஹோமம் கோவில்களில் நடத்தப்படும் சமயத்தில் கலந்து கொள்ளுதல் சிறப்பு. அல்லது நாமே மக்களை திரட்டி குழுவாக இதனை செய்யலாம். நல்ல காரியங்களில் கூட்டு முயற்சி அதிக நன்மையை செய்யும்.- Source: kalakkal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply