பாபாவின் பக்தர்கள் மீது பொறாமை வரலாம் ஆனால் பாபா மீது வரலாமா?

0

பக்கிரியே… உன்னை இறுக்கமாக பற்றிகொள்கிறேன். பெரும் சூறாவளியே வந்தாலும் உன் பாதங்களில் பற்றியுள்ள என் கரங்களை மறந்தும் எடுத்து விட மாட்டேன். எல்லாம் நீயே சர்வமும் நீயே என்னும் போது உன்னை மீறி என்னை துயரங்கள் என்ன செய்து விட முடியும் பாபா.

கவலைகளை என்னிடம் இறக்கிவை. நீ மகிழ்ச்சியாக இரு என்று சொல்லும் அன்னையை போல் என்னையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உன் னால் மட்டுமே முடியும். எனது சுமைகளைச் சுமப்பதோடு அதைக் கடந்துசெல்லவும் உன் திருக்கரங்களால் என்னை வழிநடத்தி செல்கிறாய் என் னும் போது என்னை விட பேறு பெற்றவர்கள் இந்த உலகில் யார் இருக்க முடியும் என்னும் பெருமை ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதைக் கட்டி காப்பாற்ற நீ சொல்லும் வழியில் நான் நடக்க வேண்டும் என்றும் மனம் விரும்புகிறது. ஆனால் அதையும் செய்பவன் நீதான் என்னும் போது மனதில் மகிழ்ச்சியைத் தாண்டி நிம்மதிதான் நீடித்திருக்கிறது. இது பாபாவின் பக்தர்கள் அனைவரது உள்ளத்திலும் தோன்றும் பொதுவான விஷ யம் தான்.

பாபாவின் பக்தர்கள் மீது பொறாமை வரலாம். ஆனால் பாபா மீது வரலாமா? வந்ததே. திருப்பதி வேங்கட ரமண சுவாமியின் பக்தரான கோபால் ராவால் சீடராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். பாபாவை சீடராக கொண்ட கோபால்ராவுக்கு பாபா என்றால் மிகவும் பிடிக்கும். குருவுக்கும் அந்தச் சீட னுக்கும் இடையிலான நட்பு அளவிடமுடியாமலிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த அன்பை கண்டு கொதித்து போனார்கள் பாபா வுடன் இருந்த மற்ற சீடர்கள்.

ஒருநாள் பாபா தோட்டத்துக்குப் போன போது சீடர்களில் ஒருவன் பெரிய கல்லை பாபாவின் மேல் விட்டெறிந்தான். இதை உணர்ந்த குரு அந்தக் கல்லை கீழே இறக்காமல் அந்தரத்திலேயே நிறுத்தினார். சுற்றியிருந்தவர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். சீடர்கள் குழப் பத்தில் ஆழ்ந்தார்கள். அப்படியும் ஆத்திரம் தீராத சீடர்கள் அருகிலிருந்த கல்லை எடுத்து மீண்டும் பாபாவின் மீது வீசினார்கள்.

அதைத்தடுக்க விரும்பாத குருகோபால்ராவ் ஓடிச்சென்று பாபாவுக்கு முன் அந்தக்கல்லை தன் தலையில் வாங்கிக்கொண்டார். நடந்ததை நொடிப் பொழுதில் உணர்ந்த பாபா குருவின் பக்தியை நினைத்து உருகினார். துடிதுடித்து போனார். கண்ணீர் விட்டு அழுதார். சுற்றியிருந்தவர்கள் குரு வுக்கு சீடன் மேல் இருந்த அன்பை நினைத்து வியந்தார்கள்.

குருவோ பாபாவை அழைத்தார். ஏன் அழுகிறாய் குழந்தாய். நான் எங்கே உன்னை காப்பாற்றினேன். அது வேங்கடவனின் லீலையே. நான் எடுத்த பிறவி நாளை மாலைக்குள் முடிந்துவிடும் அதற்குள் என்னிடம் இருக்கும் சக்தியை உனக்குஅளித்துவிட விரும்புகிறேன் என்றார். பிறகு அருகில் இருந்த பசுமாட்டிடம் சென்று பாலை கறந்து கொடுக்க சொன்னார். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply