கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரம்

0

ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக உள்ளது.

கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரம்

இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.

செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கர்ப்பத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.

நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply