இறைவனுக்கு நிகராக நடமாடும் தெய்வம் சீரடி சாய் பாபா..!

0

மகான்கள் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள். நம்மை பார்க்கும் போதே நம்மை தொடரும் நன்மைகளையும், தொடரும் சோதனைகளையும் கண்டறிந்து சூசகமாக தெரிவிப்பார்கள். அதனால் தான் மகான்கள் இறைவனுக்கு நிகராக நடமாடும் தெய்வமாக மனிதர்கள் அவர்களை வழிபட் டார்கள். அவர்களையே குருவாக ஏற்றுகொண்டார்கள்.

மகான்களைப் பொறுத்த வரை அவர்களிடம் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தவோ, மனிதர்கள் முன்னிலையில் பெருமிதம் கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். எளிமையாக வாழ்வதையே விரும்புவார்கள். தனிமையும் எளிமையும் எத்தகைய மனிதனையும் வல்லமையாக்கும் என்று சொல்வது மகான்களைப் பார்த்துதான்.

நாம் குறிப்பிடும் மகானும் இப்படித்தான். எளிமையானவர். பக்தர்கள் இவரது பாதத்தில் கொட்டி குவிக்க விரும்பினாலும் விரும்பிய நோட்டு களை அல்லது சில்லறைகளை விரும்பியவர்களிடம் மட்டுமே கேட்பார். அதையும் அன்றே அவரை தரிசிக்க வரும் ஏழைகளுக்கு கொடுத்து விடு வார்.

எளிமையான வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்தவர் இவர். பக்தர்களால் பக்கிரி என்று அன்போடு அழைக்கப்பட்டாலும் பக்தர்களைத் துன்பத்தி லிருந்து பாதுகாப்பாய் காப்பவர். அந்த மகான் தான் பாபா. பாபாவை விரும்பாத பக்தர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டால் முன்பு இருந்தார்கள் அவர் வாழும் போது அவரை வழிபட்ட மக்களைக் கண்டு நகைத்தார்கள். பாபா செய்வது எல்லாம் மாயம் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் அப்படி ஏளனம்செய்தவர்கள் எல்லாம் இறுதியில் பாபாவின் மகிமையை உணர்ந்து அவரது பாதத்தைப் பற்றுவதையே மகிழ்ச்சியாக கொண்டார் கள். பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகி போனார்கள்.

அவர்களைத் தன்பால் ஈர்க்க எந்தவிதமான மாயங்களையும் பாபா கையாளவில்லை. அவர்களைத் தண்டிக்கவில்லை. ஆனால் அவரது கருணை மிக்க பார்வை அவர்களை மாற்றியது. அவரது எளிமை அவர் பால் அவர்களது கவனத்தைத் திசைதிருப்பியது. ஷீரடியில் பாபாவை மசூதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த போது அங்கிருந்த ஹரி என்னும் மானிடன் எல்லோரையும் பார்த்து நகைத்தான்.சில்லறை கடவுளை தரிசிக்க வந்தீர்களா என்றான். எல்லோரது கோபமும் இவன் புறம் திரும்பவே சரி நானும் மசூதிக்குள் உள் நுழைகிறேன். உங்கள் பக்கிரியைத் தரிசிக்கி றேன் என்றபடி தனது காலணியை மசூதியின் வாயிலில்விட்டு விட்டு உள்ளே செல்லாமல் திரும்பிவிட்டான்.

மனதில் பாபா உண்மையானவராக இருந்தால் எனது காலணி திரும்ப கிடைக்கும். என்னிடம் சேரும் என்று நினைத்தான். மறுநாள் மராத்தி சிறு வன் ஒருவன் கழியில் காலணியைத் தொங்கவிட்டு ஹரியிடம் வந்தான். நீங்கள் தான் ஹரியா என்றான். அவனிடம் தனது காலணியை கண்ட தும் திகைத்த ஹரி ஆமாம். இது எப்படி உன்னிடம் வந்தது என்றான்., சற்று பொறுங்கள் என்ற சிறுவன் உங்கள் தந்தை பெயர் கனோபாவா?என் றான்.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply