கருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை

0

குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பல தம்பதியர் தற்போதெல்லாம் குழந்தைப் பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சிலரோ குழந்தைப் பாக்கியத்தை இனிதே அனுபவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகி ஓரிரு மாதத்திலேயே கருவுறுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள், எவ்வளவோ முயற்சித்தும் குழந்தைப் பாக்கியம் இன்றி வாடுபவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் போதும் 20 – 25 சதவீதம் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இதன் மூலம் இனிதே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று கூற முடியாது.

இருப்பினும் கருவுறுவதற்கான வாய்ப்பை 40 – 45 வீதமாக அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

* தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஆணாக இருந்தால் உடனடியாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகைப்பிடிப்பது விந்துக்களின் வீரியத்தை குறைக்கும். இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் புகைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதனால் கரு முட்டைகள் வலுவிழப்பதோடு கருவுற்றாலும் அடிக்கடி கருக்கலைதல் நிகழும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

* குறித்த தம்பதியருக்கு கருவுறுதல் எட்டாக்கனியாக உள்ளதெனில், அது மதுசாரத்தை உட்கொள்வதனாலாகவும் இருக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருக்கும் எனின் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். குழந்தைப் பேறு தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரும் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

* உடற்பருமன் அதிகமாக இருந்தாலோ அல்லது உடற்பருமன் குறைவாக இருந்தாலோ கருவுறுவது தொடர்பில் சில சிக்கல்கள் தோன்றலாம். எடை அதிகமாக இருந்தால் படிப்படியாக அதை குறைத்தல் வேண்டும். அதே போல் எடை குறைவாக இருந்தால் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பெறுதல் வேண்டும். பொதுவாக பி.டிம்.ஐ ஆனது 15.5 – 24.9 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

* வெள்ளைப்படுதல் என்பது ஒவ்வொருவருக்கும் நிகழும் சாதாரணமான விடயமாகும். சளியம் போன்ற காணப்படும் இந்த வெள்ளை நிற திரவத்தின் தன்மையை வைத்து எந்த நாட்களில் கருவுறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பதைக் கண்டறியலாம். நல்ல வழுவழுப்புத் தன்மை கொண்டதாக காணப்படும் நாட்களில் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

* பொதுவாக ஆண்களுக்கு காலை வேளையில் விந்துக்களின் வீரியம் அதிகமாக இருக்கும். எனவே காலையில் எழுந்ததும் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply