புகழ்பெற்ற ஹனிமூன் நகரத்தில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் வைரலாகும் புகைப்படம்!

0

இன்றைய தேதியில் தமிழக இளைஞர்களின் கோபத்தை அள்ளிக்கொள்ளும் ஒரே ஆள் விக்னேஷ் சிவன் தான். ஏனென்றால் அவர் நயன்தாரவின் அன்புக் காதலனாக வலம் வருகிறார்.

நயன்தாரா 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோயினாக இருந்து வருபவர். தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கும் அவர் தன் தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும்.

https://www.instagram.com/p/Byck8osBvxi/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

மேலும் நயன்தாரா ஷூட்டிங் இல்லாத சமயங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கம். அதே போல் தான் தற்போது தன் காதலருடன் உலகின் மிக முக்கிய ஹனிமூன் தீவு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

https://www.instagram.com/p/ByiD1N-hBn3/?utm_source=ig_embed

கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவு காதலர்கள் மற்றும் ஜோடிகள் ஹனிமூன் செல்லும் புகழ்பெற்ற தீவு ஆகும். இந்த தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. – Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply