வியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

0

லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆலயங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் நல்ல விஷயங்கள் நடைபெறும். ஆலயத்துக்கு செல்ல முடியாத பட்சத்தில் வீட்டிலும் நரசிம்மரை வழிபடலாம். ஆனால் அவரை வழிபட வேண்டிய இடம் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடும் தினத்தன்று அவரை வணங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நரசிம்மருக்கு அசைவம் சுத்தமாக பிடிக்காது. வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார்.

சுவாதி நட்சத்திர தினங்களில் முடிந்தவர்கள் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் அவர் சன்னதியை சுற்றி வந்து வழிபட்டாலே போதும். காலையில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபட்டால் நரசிம்மரின் பரிபூரண ஆசியை பெறலாம்.

வீட்டில் வழிபடுபவர்கள் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து வழிபடலாம். நரசிம்மர் படத்துக்கு பூ வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மறக்காமல் பானகம் நெய்வைத்தியம் படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த படத்தை 12 முறை சுற்றி வந்த வழிபடுவது ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன்களை உங்களுக்கு தரும்.

கடன்கள், நோய்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்லோகங்கள், மந்திரங்களை சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.

நரசிம்மர் கவசம், நரசிம்மர் அஷ்டகம், நரசிம்மர் அஷ்டோத்ர சதநாம மந்திரம், நரசிம்மர் துதி, நரசிம்மர் நகஸ்துதி, நரசிம்மர் மந்திரம், நரசிம்மர் மங்கள நவரத்ன மாலிகா, நரசிம்மர் போற்றி போன்றவற்றை முடிந்த போதெல்லாம் சொல்லி வந்தால் நரசிம்மரின் கருணை பார்வை உங்கள் மீது மழை போல் பொழியும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply