வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் முருகப்பெருமான் ..!

0

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.

கருவறையில் இருக்கும் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாவார். கருவறைக்குள் முருகப்பெருமான் வழிபட்ட சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஈசனை வழிபாடு செய்த தலம் என்பதால், கருவறையில் உள்ள முருகனுக்கு வேலும், மயிலும் இல்லை.

இந்த ஆலயத்தில் இருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு முன் பக்கத்தில் ஒரு திருமுகமும், பின்பகுதியில் ஐந்து திருமுகங்களும் அமைந்திருக்கும் அபூர்வ வடிவத்தைக் காணலாம். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply