முதல் வழிபாடு யாருக்கு..? செய்ய வேண்டும் முருகனுக்கா? பிள்ளையாருக்கா?

0

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது சிவன் மலை சுப்பிரமணியர் கோவில். இந்த மலை சித்தர் பூஜித்த மலை ஸ்தலமாகும். சிவன் மலயின் மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பால் பல திருப்பணிகள் மேற்கொண்டதால் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் தான் சிவன் மலை.

இந்த மலையை சுற்றி பசுக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சிவனின் சேயான (பசு) குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பததால் சேமலை என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் அது சிவன்மலை என மருவியதாக தல வரலாறு கூறப்படுகிறது. இந்த கோயில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் உத்தரவு பெட்டி என்று அழைக்கின்றனர். இதில் என்ன வைக்கப்பட்டுள்ளதோ அது தொடர்பான நல்லதோ, கெட்டதோ விரைவில் நடைபெறும் என்பது மக்களில் நம்பிக்கை.

ஒருநாள் இந்த கோயிலின் மூலவர் பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை கூறி வழிபடு என்று சொல்வாராம். அதன்படியே பக்தரும் கோயில் நிர்வாகிகளிடம் பேசி அந்த பொருளை பூசைக்கு வைத்து அந்த பெட்டியில் இடுவார்கள். அப்படி அந்த பெட்டியில் என்ன வைத்து பூஜைசெய்கின்றோமோ அது அப்படியே நடக்குமாம். அப்படி பல விஷியங்கள் ஆண்டுதோரும் நடந்திருக்கிறதாம். சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ்ப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மிகபெரிய பேரழிவு சுனாமி வந்து அப்பாவிகளின் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது.

அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது. அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். மஞ்சள், தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது என கூறுகின்றனர். இப்படி பக்தர்களின் கனவில் வந்து சொல்லும் காரியத்தை செய்யும் போது அந்த விஷியங்கள் அப்படியே நிரைவேறும் என்கின்றனர் பக்தர்கள். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயமாம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானதாம். வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார். மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. அதன் பிறகு பிள்ளையாரை வழிபடுகிறனர். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply