எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சரவைக்கு உறுதிமொழி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். டிசம்பர் இறுதிக்குள், சமையல் எரிவாயு வரிசைகள் அகற்றப்படும்.
இதன்பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ லங்கா தெரிவித்துள்ளது.



