இன்று 7-ம் ஆண்டு நினைவு நாள்- அப்துல் கலாம் நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி.

0

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிட கட்டிடம் மலர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நினைவு நாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அங்கு வந்த அப்துல்கலாம் குடும்பத்தினர் நினைவிடத்தில் சிறப்பு தொழுகை நடத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் அப்துல் கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், அண்ணன் மகள் நசிமா மரைக்காயர் மற்றும் ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply