ஜனாதிபதி செயலகத்தையும் அலரி மாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும்!

0

ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேசமயம் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதை காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கான வெற்றியாக கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வெற்றி காரணமாக தங்கள் கட்டுப்பாட்டின் உள்ள கட்டிடங்களை கையளிக்கவேண்டிய பொறுப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு உள்ளதாக தெரிவித்த அவர், இது தேசிய பாதுகாப்பு விவகாரம் எனவும் ஓமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply