நாட்டில் எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை குறித்த விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன்பிரகாரம் , கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுவதாக நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டை வந்தடைந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்றுடன் முடிவடைவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியள்ளது.
மேலும் 2500 டன் எரிவாயு மெட்ரிக் கொள்கலன் கொண்ட கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



