க பொ த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் குறித்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன் குறித்த பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களிலும்,542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டு பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும்,110,376 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்கலாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
மேலும் கொவிட் 19 தொற்று உறுதியான பரீட்சார்த்திகள் தோன்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.



