இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற் பகுதிகளில் மணித்தியாளத்திற்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகவே குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply