மஹிந்த ராஜபக்ஷா பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பதவி விலகல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரச தலைவர் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுதற்கான கடிதத்தை அரசர்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு நேற்றைய தினம் மாலை அனுப்பியிருந்தார்.
அவ்வாறு பொது நலனுக்காக அர்ப்பணிப்புடனும் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் பாரிய தியாகங்களை செய்ய தான் தயாராக உள்ளதாகவும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்மொழியப்பட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் மூலமும் நாடும் மக்களும் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண்பதே தனது ஒரே நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



